• Jan 19 2025

பிக்பாஸ் சீசன் 3 போல தலைகீழாக மாறிய நாமினேஷன் ஓட்டுக்கள்! வெளியேறும் தருவாயில் விசித்திரா? இம்முறையும் பூர்ணிமா சேவ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில்  இந்த வாரம் நடைபெற  உள்ள எலிமினேஷன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, பூர்ணிமாஇ ரவீனா, மணிச்சந்திரா, ஆர் ஜே பிராவோ, அக்ஷயா, கானா பாலா மற்றும் விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் அடிப்படையில்  விசித்ரா அதிகமான ஓட்டுக்களுடன் முதலிடத்தில் காணப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பூர்ணிமா சேப் சோனில் இருக்கிறார். 


அதேவேளை, கடைசி இடத்தில் விக்ரம் இருக்க அதற்கு முன் இடத்தில் கானா பாலா குறைவான ஓட்டுகளுடன் இடம் பெற்றுள்ளார். இதனால் சரவணன் விக்ரம் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், சீசன் 3லையும் இதுபோலவே சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது அந்த சீசனில் தர்சன் எப்படியும் காப்பாற்றப்படுவார் என நினைத்து செரினுக்கு அதிக வாக்குகளை அள்ளி அனுப்பி விட்டனர். இதை தொடர்ந்து செரின் சேவ் ஆக தர்சன் வெளியேறி செல்கிறார்.

எனவே அதுபோலவே இதுவும் நடக்க வாய்ப்பு இருப்பதால் விசித்திரா விஷயத்தில் கவனமாக வோட் போடுமாறு அவரின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement