• Dec 05 2023

பிக்பாஸ் பிரதீப்பின் கனவு நிறைவேற போகிறதா? மற்றுமொரு வாய்ப்பளித்த விஜய் டிவி! ரசிகர்கள் கொண்டாட்டம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7ல் அதிரடியான திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதீப் விவகாரத்தில் விஜய் டிவி அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளதாம்.

இறுதியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதன்படி இறுதி வெற்றி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி உள்ளார் கமல்.

இதற்கு காரணம் பிரதீப் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தான்.எனினும் இது கமல் முடிவு மட்டுமல்ல. பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்களின் முடிவும் தான். அவரது வெளியேற்றம் அநீதியானது என்றும், விஜய் டிவி மட்டுமன்றி கமல்ஹாசன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.


இதை தொடர்ந்து, தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிரதீப் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்ட போதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில், தவறாக சித்தரிக்கப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கி விஜய் டிவி முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஹாட் ஸ்டாருக்காக ஒரு வெப் தொடரை இயக்க பிரதீ இடம் விஜய் டிவி கதை கேட்டுள்ளதாகவும் விரைவில் தற்போது பிரதீப் அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது தனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்று கனவு இருப்பதாக பிரதீப் கூறிய நிலையில் அந்த கனவு தற்போது நிறைவேற போவதாக தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட்கார்ட் கொடுக்கப்பட்டதால் அவரது வாழ்க்கையை திசை மாறிப் போன நிலையில் தற்போது மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement