சமீபத்திய பேட்டியொன்றில் கலந்து கொண்ட 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் பிரபல திரைப்படங்கள் தொடர்பாக யூடுப் சேனல்கள் நெகட்டிவான விடையங்களை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என சுட்டிக்காட்டி பேசியிருந்தார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது திரைப்படங்கள் விமர்சனங்களினால் தான் வெற்றி பெறவில்லை என்ற கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாத்துறையில் எது நடந்தாலும் அதனை விமர்சனம் செய்பவர்கள் அதிகம் அப்படி இருக்க பிரபல வலைப்பேச்சு யூடுப் சேனல் குறித்து 96 திரைப்பட இயக்குநர் அதிரடியான செய்தியை கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டியொன்றில் கலந்து கொண்ட 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் பிரபல திரைப்படங்கள் தொடர்பாக விமர்சனம் செய்வதை தாண்டி பொதுவாக நெகட்டிவான விடையங்களை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்க்கு நானே ஒரு உதாரணம், 96 படத்தில் பயன்படுத்திய பாடல்களுக்கு நான் கோப்பிரைட்ஸ் வாங்க இல்லை என்று ஒரு நபர் சொன்னார். இவ்வாறு செய்தவர்களை போ என்ற வார்த்தை சொல்லி திட்டுவேன் என்றும் சொல்லியிருந்தார்.
நான் உடனே அவருக்கு கால் செய்து இந்த விடையம் யாரிடம் விசாரிச்சீங்க? யார் சொன்னது என்று கேட்டேன். ஏனென்றால் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர், இயக்குநர் கிட்டாதான் கேட்கமுடியும், ஆனால் எங்களுக்கு கால் வரவே இல்லை. அப்போது அவங்களுக்கே தெரியும் நாங்கள் பாடல் உரிமை வாங்கி இருக்கிறோம் என்று ஆனாலும் விமர்சனம் செய்வதற்காக இப்படி வீடியோ போடுகிறார்கள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் நாங்க ஒன்னும் செய்யமுடியாது எனக்கு யூடுப் சேனல் இருந்தால் நானும் அவங்களுக்கு எதிராக வீடியோ போடுவேன், ஆனால் அது எனக்கு அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குநர் பிரேம்குமார். இவர் கூறியது 98 திரைப்படம் வெளியாக இருந்த காலகட்டத்தில் வலைப்பேச்சு சேனல் 96 திரைப்படம் குறித்து பேசி இருந்தது அதனை வைத்தே இவர் இந்த பேட்டியில் பேசியுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
Listen News!