• Jan 24 2025

கதையும் இருக்கு காட்சியும் இருக்கு..! விடுதலை பாகம்-3 ரெடியா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் விடுதலை 2. இத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது நடந்து வருகிறது. அதில் விடுதலை திரைப்படத்தின் 3வது பாகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த விடையம் ரசிகர்களுக்கு குதூகலத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பார்ப்போம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 20ம் திகதி ரிலீஸாக இருக்கிறது. இதன் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் பேட்டி  ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி விடுதலை பாகம் 3 குறித்து பேசியுள்ளார்.


அதாவது நிகழ்ச்சி தொகுப்பாளர் வெற்றிமாறன் சேர் வந்து உங்க கிட்ட விடுதலை 3 எடுப்போம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க அதற்கு விஜய் சேதுபதி நானே வெற்றி சேரிடம் சொல்லி இருக்கிறேன் விடுதலை 3 எடுப்போம் என்று, அவர் என்ன நினைத்திருக்கிறார் என்று தெரியவில்லை, இந்த கதையை தொடர்ந்து செய்யலாம். 


அதாவது பாகம் 3க்கான கதையும் இருக்கு காட்சியும் இருக்கு. கருப்பன் என்று ஒரு ரோல் இருக்கு அதை வைத்து கதை எழுதலாம், குமரேசன் வாழ்க்கை வைத்து எடுக்கலாம், மஹாலக்ஷ்மி ரோல் மஞ்சுவாரியர் பண்ணி இருக்காங்க அதை வைத்து ஒரு கதை எடுக்கலாம். இப்படி பாகமா பிரிக்க நிறைய வாய்ப்பு இருக்கு வெற்றிமாறன் சார் நினைச்சா விடுதலை பாகம் 3 வாரத்துக்கு வாய்ப்பும் இருக்கு என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.  



Advertisement

Advertisement