நாகர்ஜுனாவின் 100வது திரைப்படம் என்றாலே அது ஒரு முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. எந்த நடிகருக்கும் 100வது படம் மிகுந்த அர்ப்பணிப்பு, கலை நெறி மற்றும் ரசிகர்களுக்கான நன்றியின் வெளிப்பாடாக அமைவது வழக்கம். அதேபோல, நாகர்ஜுனாவும் தனது 100வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் ரா. கார்த்திக். தமிழ் சினிமாவில் “நித்தம் ஒரு வானம்” என்ற விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையிலும் நல்ல வரவேற்பை பெற்ற படத்தின் இயக்குநர் தான் இதனையும் இயக்கவுள்ளார்.
அந்தவகையில் சமீபத்திய நேர்காணலில் கலந்துகொண்ட நாகர்ஜுனா, "இந்த படம் ஒரு பேமிலி ட்ராமா கதையாக இருக்கும். ஆனால் அதனுடன் சேர்ந்து திகிலூட்டும் ஆக்சன் காட்சிகளும் இடம்பெறும். இது ஒரு நல்ல எமோஷனல் சினிமா ஆகும்." என்று தெரிவித்துள்ளார்.
Listen News!