• Jan 18 2025

சிலமணி நேரத்திலே பலமில்லியன் சப்ஸ்கிரப்பர்ஸ்... ரொனால்டோவின் புதிய சாதனை...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சோசியல் மீடியாவில் அதிகளவில் ரசிகர்கள் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூ-டியூப் சேனலை தொடங்கியுள்ளார். 


எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ரசிகர்களும் பேஸ்புக்கில் 170 மில்லியன் ரசிகர்களும் இன்டாவில் 636n  மில்லியன் போலோவர்களும் உள்ளனர். ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு 26.7 கோடி வருமானம் ஈட்டி வருகின்றார். இதனை எக்ஸ் தளத்தில் ரொனால்டோ அறிவித்த சில நிமிடங்களிலேயே 2.78 மில்லியன் ரசிகர்கள் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைபர்கள் செய்துள்ளனர்


இதன்பின் ரொனால்டோ 11 ஷார்ட் வீடியோக்களை வெளியிட்டு ஆச்சரியம் கொடுத்தார். அவை மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட வீடியோவாக அமைந்துள்ளன. அதே போல் இந்த யூடியூப் சேனலில் ரொனால்டோவுக்கு மிகவும் பிடித்த கால்பந்து குறித்து தொடர்ச்சியாக ஆலோசிப்பார் என்று கூறப்படுகின்றது 


அதேபோல் ரொனால்டோவுக்கு பிடித்த விஷயங்கள் குடும்பம் உடல் ஆரோக்கியம் ஊட்டச்சத்து கல்வி மற்றும் தொழில் ஆகியவை குறித்தும் பேசவுள்ளார். அதே போல் ரொனால்டோ தனது சேனலுக்கு சிறப்பு அழைப்பாளர்களையும் அழைத்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement