• Sep 14 2025

மன்சூர் அலிகான் நன்றி மறவாத நடிகர்.. ரொம்ப பாவம்.! பிரபல இயக்குநரின் அதிரடிப் பகிர்வு.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். தனது கேரியரை ஒரு நடனக் கலைஞராக துவங்கிய இவர், பின்னர் கதாநாயகனாகவும், எதிர்மறை வேடங்களிலும், பின்னாளில் குணச்சித்திர வேடங்களிலும் தனது தனித்துவத்தால் தமிழ் ரசிகர்களிடம் ஒரு இடத்தை பிடித்தார்.


இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்பொழுது வெளிவந்துள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு பேட்டியில், பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மன்சூர் அலிகான் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். அந்த உரையாடலில் அவர் கூறிய சில வார்த்தைகள் மனதை  நெகிழ வைக்கும் வகையில் இருந்தன.

மன்சூர் அலிகான் திரையுலகில் பல்வேறு மாறுபட்ட பாத்திரங்களில் தன்னை நிரூபித்திருந்தாலும், மனித நேயம், நடிப்பின் மீது கொண்ட பற்று, மற்றும் சமூக ஒத்துழைப்புக்கான உறுதி ஆகியவை அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக காட்டுகின்றன.


அந்தவகையில் ஆர்.கே.செல்வமணி, " மன்சூர் தனக்கு கொடுக்கின்ற கரெக்டராகவே அவன் மாறிடுவான். அதனால் தான் நடிகைகளோட பிரச்சனை வரும். ஆனா என்ன பொறுத்தவரையில் அவன் மிகச்சிறந்த நடிகன். அதையும் தாண்டி அவன் நன்றி மறவாத நடிகன், ரொம்ப நல்லவன்" என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement