• Jan 19 2025

மணிகண்டனுக்கு இது தேவையா? தவறான வழியில் செல்வதாக திரையுலகினர் அதிருப்தி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ ’லவ்வர்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் திடீரென தவறான பாதையில் செல்வதாக திரை உலகினர் புலம்பி வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் தற்போது நல்ல கதை அம்சமுள்ள சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் ’லவ் டுடே’ ’குட் நைட்’ ‘டாடா’ ‘ல்வ்வர்’ ‘ஜோ’ உள்பட பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது என்பதும் தெரிந்தது.

பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன், கவின், ரியோ ஆகிய இளைய தலைமுறை நடிகர்கள் தான் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தப் போகும் எதிர்கால நடிகர்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ ’லவ்வர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு தற்போது மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவருடைய சம்பளமும் அதிகரித்து விட்டதாகவும் இரண்டு முதல் மூன்று கோடி வரை அவருக்கு சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர் நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு திரைப்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஒரு கதையை தயார் செய்து அவரிடம் கால்ஷீட் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் பணி என சென்று விட்டால் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்றும் அதுமட்டுமின்றி ஒரு படத்தை இயக்கி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் ஆகிவிடும் என்பதால் அவருக்கு தற்போது உள்ள மார்க்கெட் இரண்டு வருடம் கழித்து எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது என்றும் எனவே காற்றுள்ள போதே நடிப்பில் மணிகண்டன் தூற்றிக் கொள்ளாமல் இயக்குனர் என்ற தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக திரையுலகினர் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தான் இயக்குனர் துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் அந்த பாதையில் தான் செல்லப் போவதாக மணிகண்டன் தனது நண்பர்கள் வட்டாரத்தில் உறுதிபட  கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement