• Dec 07 2024

இணையத்தில் கசிந்த வீடியோ பதிலடி கொடுத்த மலையாள நடிகை

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகளுக்கு ஏற்படும் வழமையான பிரச்சினை காதல், ஆபாச வீடியோ லீக்கானது இப்படி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வதுதான். அதேபோல மலையாள நடிகை ஒருவரின் ஆபாச வீடியோ வெளியானதால் பரபரப்பாகியுள்ளது மலையாள சினிமா. 


‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ என்ற திரைப்படம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது மட்டுமில்லாமல், கிராண்ட் பிரிக்ஸ் என்ற விருதினையும் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் நடிகை திவ்யா பிரபா என்ற மலையாள நடிகை ஆபாச காட்சியில் நடித்திருந்தார்.


இந்நிலையில் இவரின் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போது நடிகை திவ்யா பிரபா சமீபத்திய பேட்டி ஒன்றில் தகுந்த பதிலடி கொடுத்திருந்தார்.  “நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போதே கேரளாவில் இருந்த சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்தேன்.


கசிந்த வீடியோவை பகிர்ந்து வரும் நபர்கள் வெறும் 10% மக்கள் தான். ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். அந்த வகையில்தான் இந்தப் படத்திலும் எனது கதாபாத்திரத்தில் பிடித்து நடித்தேன். புகழுக்காக நான் ஆபாச காட்சியில் நடித்ததாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

d_i_a


நான் பல விருதுகளை வென்றுள்ளேன். அதோடு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஆபாசமாக நடித்துதான் புகழ் பெற வேண்டும் என்ற நிலைமை எனக்கு இல்லை” என்று ஊடகங்கள் முன்னிலையில் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement