• Jan 18 2025

கோபியை தேடியலையும் ராதிகா.. இனியா செய்த காரியம்? உயிர் பிழைப்பாரா கோபி?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபிக்கு ஆபரேஷன் பண்ண பாக்கியாவை சைன் பண்ண சொல்லுகின்றார்கள். ஆனாலும் பாக்கியா தயங்கியதால் செழியனை வைக்க சொல்லுகிறார். அதன் பின்பு கோபிக்கு ஆப்ரேஷன் நடக்கிறது.

இன்னொரு பக்கம் ராதிகா கோபி வரவில்லை என்று கோபியின் நண்பருக்கு போன் பண்ணி கேட்கின்றார். அந்த நேரத்தில் கோபி கிச்சனுக்கு வரவில்லை என்று கிச்சனில் இருந்தவர்களும் கால் பண்ணி சொல்லுகின்றார்கள். இதனால் ராதிகா டென்ஷன் ஆகின்றார்.

மறுபக்கம் கோபியின் போன், பேஸ் எல்லாவற்றையும்  ஈஸ்வரிடம் கொடுக்கின்றார்கள். அப்போது ராதிகா கால் பண்ண ஈஸ்வரி போனை கட் பண்ணுகிறார். இனியா போனை சுவிட்ச் ஆப் பண்ணி விடுகின்றார். அதன் பின்பு கோபியின் பேஸில் ஈஸ்வரியின் போட்டோ இருப்பதை பார்த்து தனது மகனை பற்றி அழுது புலம்புகின்றார் ஈஸ்வரி.


இதைத்தொடர்ந்து கோபிக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் நடந்து முடிந்தது என்று டாக்டர் சொல்லுகின்றார். இதை கேட்ட எல்லாரும் மன நிம்மதி அடைகின்றார்கள். ஆனாலும் அவரை பார்க்க வேண்டும் என்று ஈஸ்வரி கேட்க, இப்போதைக்கு அவரை பார்க்க முடியாது இரண்டு நாட்களின் பின்பு தான் பார்க்க முடியும் என்று டாக்டர் சொல்லிச் செல்கிறார்.

இறுதியாக ராதிகா, பாக்கியா வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்று அங்கு பார்த்தபோது அங்கும் யாரும் இல்லை. இதனால் அவர் வழமையா போற பாருக்கு போய் பார்க்கின்றேன் என்று அங்கு கிளம்பிச் செல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement