• Jul 16 2025

தாய்,தந்தை,மனைவிக்காக கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம்!வைரலாகும் மதுரை முத்துவின் வீடியோ!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவில் தனது நகைச்சுவை மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. இவர் பல  தொலைக்காட்சியில் சிரிப்புரையாளர்,மேடை நகைச்சுவையாளார் என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் ,தந்தை மற்றும் மனைவிக்கு என கோயில் கட்டி இருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்து இருந்தது. 


இந்த நிலையில் இன்று சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதாவது " தாய்,தந்தை, மனைவிக்காக கட்டிய கோவிலில்  இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது "  அந்த விழாவில் மதுரை முத்து மற்றும் அவரது பிள்ளைகள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்ததுடன் அங்கு   ஆதரவற்றவர்களுக்கு உணவும் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு ஆடைகள் மற்றும் பைக், பாடசாலை உபகரணங்கள்  என்பவற்றை வழங்கி இருந்தனர் .


மேலும் அங்கு  இலவச நூலகம் ஒன்றினையும் திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார். இந்த செயலைப்பார்த்தா ரசிகர்கள் மற்றும் இவ் விழாவிற்கு வருகை தராதா பிரபலங்கள்  தமது வாழ்த்துக்களை  சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement