• Jul 16 2025

போதைக்கு அடிமையாகும் போது குழந்தை இருக்கு என்று தெரியாதோ? ஸ்ரீகாந்தை விமர்சித்த சுசித்ரா.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திரையுலகம் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் பரபரப்பாகி வருகின்றது. நடிகர் ஸ்ரீகாந்த், சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மீது போதை மற்றும் சட்டவிரோத வைத்திருப்பு குற்றங்கள் சுமத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில், அவர் தனது மகனை கவனிக்க வேண்டும் என தாக்கல் செய்த ஜாமீன் மனுவும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயம். இப்படியான சூழ்நிலையில், பின்னணி பாடகியும், சமூக ஊடகங்களில் விமர்சனக்குரலாக வலம் வருபவருமான சுசித்ரா, ஸ்ரீகாந்த் விவகாரத்தைப் பற்றிய அதிர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

ஒரு YouTube பேட்டியில், சுசித்ராவிடம்,“நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுசித்ரா, “அவர் இவ்வளவு ஈஸியா மாட்டுப்பட்டுட்டார்… சினிமா களத்தில் போதைப்பொருள் பழக்கம் இருக்கின்றது. சிலருக்கு இந்த சிக்கல் ரொம்ப common.” என்றார்.


மேலும், ஜாமீன் கேட்கும் போது குழந்தைகளைப் பராமரிக்கணும் என கூறிய ஸ்ரீகாந்த் குறித்து, சுசித்ரா கடுமையான விமர்சனங்களைச் சுட்டி காட்டினார். “இப்போ நீதிமன்றத்தில் போய் 'எனக்கு குழந்தை இருக்கு, கவனிக்கணும்னு சொல்லுறாரு. அப்ப போதைப் பொருள் பாவிக்கும் போது அந்த குழந்தைகள் ஞாபகம் இல்லையா? அதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு!” எனவும் கூறியிருந்தார். 

சுசித்ராவின் இந்த வரிகள் வாசகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பாக வலுவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement