• Jan 19 2025

ப்ளீஸ் என்னை அடிக்காதீர்கள்.. கேஜிஎப் நடிகைக்கு வந்த சோதனை! சுற்றி வளைத்த உள்ளூர் வாசிகள்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

கேஜிஎப் புகழ் நடிகையான ரவீனாவும் அவரது கார் டிரைவரும் வயதான பெண் உட்பட 3 பெண்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஊர் மக்களால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறித்த வீடியோவும் தற்போது இணையதளங்களில்  வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனும் அவரது கார் டிரைவரும் மும்பையில் படுவேகமாக சென்று கொண்டிருந்தபோது ஒரு சிலரை இடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன்போது பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களை சுற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வயதான பெண்கள் உட்பட மூன்று பெண்களை ரவீனாவும் அவரது கார் டிரைவரும் தாக்கியதாக கூறி உள்ளூர் வாசிகள் சண்டை போட்டுள்ளதோடு, சோசியல் மீடியாவில் #RaveenaTandon என டிரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில், ரவீனாவை பெண்கள் தாக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதன்போது நடிகை ரவீனா, தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் என்று பதற்றத்தில் தன்னை தற்காத்தும் கொண்டுள்ளார்.


மும்பையின் கார்டன் சாலையில் ரிஸ்வி கல்லூரிக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாம். மேலும், குடிபோதையில் சில பெண்கள் வழிமறித்த போது, ரவீனா காரை விட்டு இறங்கி உள்ளார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட சிலர் ரவீனாவை  தாக்கியுள்ளதோடு அவரை மிரட்டியதாகவும் அவரது கணவர் அனில் ததானியும் கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சோசியல் மீடியாவில் பரவி வந்த வீடியோவில், ரவீனாவை சுற்றி வளைத்த ஊர் வாசிகளில் ஒருவர், நீங்கள் சீக்கிரம் ஜெயிலுக்கு போக போறீங்க எனது மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது என்று கூறி மிரட்டியுள்ளாராம்.

இதன் போது அவர் கேமராவை ரவீனா பக்கம் திருப்பவும் என்னை பதிவு செய்ய வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் ரவீனாவின் பக்கம், ரவீனாவின் கார் யாரையும் இடிக்கவே இல்லை என்றும் அவரிடம் பணம் பிடுங்கவே சிலர் இந்த நாடகத்தை  நடத்தியுள்ளனர் எனவும், சிசிடிவி காட்சிகளில் ரவீனாவின் கார் வேகமாக வந்தது போல தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த பெண்கள் ரவீனாவை தாக்கும் போது தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் என்று நடிகை ரவீனா தன்னை தற்காத்து கொண்ட காட்சிகளும் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement