• Jun 11 2026

பிக் பாஸ் 8வது சீசன் பற்றி வெளியான அதகள அப்டேட்...

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் பிக் பாஸ். இது தற்போது வரையில் ஏழு சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பங்குபெற்றும் போட்டியாளர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதால் போட்டி போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி வருகின்றார்கள்.

தமிழில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இதுவரையில் இடம்பெற்ற 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். அதற்காக அவர் வாங்கும் சம்பளமும் மிகப்பெரியது என்பது யாவரும் அறிந்த ஒன்று.


இறுதியாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா டைட்டில் வின் பண்ணி இருந்தார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பணப் பரிசு  கிடைக்கப்பெற்றது.

இந்த நிலையில், தற்போது எதிர்வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement