• Jan 19 2025

தமிழுக்கு வருகிறார் மலையாள பெண் இயக்குனர்.. முதல் படத்தின் நாயகன் துருவ் விக்ரமா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் இயக்குனர் அஞ்சலி மேனன் தமிழ் திரைப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றஉஸ்தாத் ஹோட்டல்’ ’பெங்களூர் டேஸ்உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அஞ்சலி மேனன். இவரது இயக்கத்தில் உருவானபெங்களூரு டேஸ்கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில்,  வட இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



 
இந்த நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை தமிழில் இயக்க இருப்பதாகவும் அதற்காக அழகான ஒரு காதல் கதையை அவர் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் நாயகனாக நடிக்க ஒரு சில இளம் நடிகர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது அவர் துருவ் விக்ரமை தேர்வு செய்ததாகவும் இந்த படத்தில் அவருக்கு வித்தியாசமான கெட்டப் மற்றும் ரொமான்ஸ் நடிப்பை வெளிப்படுத்த இருப்பதாகவும் தெரிகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ள துருவ் விக்ரம், அந்த படத்தை முடித்ததும் அஞ்சலி மேனன் படத்தில் இணைந்து கொள்வார் என்று தெரிகிறது. இந்த படம் வழக்கம்போல் குறைந்த பட்ஜெட்டில் ஒரு அருமையான காதல் படமாக உருவாகும் என்றும் தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

Advertisement

Advertisement