• Sep 10 2026

மீனவராக நடித்தது என் பாக்கியம்.. ‘மண்டாடி’ படத்தைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்ட சூரி

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சூரி. அவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘மண்டாடி’. இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில் சூரியுடன் சுஹாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடலுக்குள் பல மைல் தூரம் சென்று படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 


மீனவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தை பார்த்த பிறகு நடிகர் சூரி அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர், “மீனவராக நடித்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். பாய்மர படகு போட்டியை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும். ‘மண்டாடி’ சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை வழங்கும். மீனவராக நடித்த அனுபவம் எனக்கு பெரும் பாக்கியம்..” எனவும் தெரிவித்துள்ளார்.

சூரியின் இந்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் சமூகத்திற்கு முக்கியமான கருத்துகளை முன்வைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement