• Jan 19 2025

பிரபாஸின் 'கல்கி 2898AD' படத்திற்கு விஜய் பட டைட்டிலா? நச்சுன்னு கேள்வி கேட்ட விஜய் ரசிகர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் உலகளவில்  பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ்.

இதை அடுத்து அவர்  நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்து தோல்வியை தான் தழுவியது.

தற்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 AD எனும் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.


இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கல்கி படத்தில்  பிரபாஸின் பெயரை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

அமிர்தாபச்சன், கமல்ஹாசன் என திரையுலகில் முதிர்ச்சி பெற்ற கலைஞர்களுடன் பிரபாஸ் இணைந்து நடித்துள்ளதோடு, அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி என இரு ஹாலிவுட் நடிகைகள் நடித்து வருகின்றார்கள்.


அத்துடன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகரான பசுபதி நடித்து வருகின்றாராம்.

கல்கி படத்தில் பிரபாஸுக்கு பைரவா  என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை அடுத்து, விஜய் நடித்த பைரவா படத்தின் டைட்டிலை பிரபாஸ் கதாபாத்திரத்துக்கு வைத்திருக்கிறார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.




Advertisement

Advertisement