• Apr 02 2025

சர்வர் டவுன் ஆகும் அளவிற்கு குவிந்த ரிக்வெஸ்ட்..! சில நொடிகளில் முடங்கிய TVK செயலி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி சற்று முன் நடிகர் விஜய் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக பதிவு செய்ய முற்பட்ட நிலையில், குறித்த செயலி முடங்கியுள்ளது.

இதை தொடர்ந்து வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கி உள்ளதாம்.


தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி வந்த நடிகர் விஜய், கடந்த மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயருடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்த அவர், அடுத்தடுத்து கட்சி சார்ந்த  அறிவிப்புகளையும் செயற்பாடுகளையும் மும்முரமாக செயற்படுத்தி வந்தார்.


இவ்வாறான நிலையில், தனது ரசிகர்களையும் உறுப்பினர்களாக மாற்றும் நோக்கில் புதிய செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து சற்று முன் குறித்த செயலின் செயல்பாட்டை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகர் விஜய். 

இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் இணைவதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முந்தியடித்துள்ள நிலையில், குறித்து செயலி  தற்போது முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement