• Apr 02 2025

பிக்பாஸ் தலைக்கு தில்ல பாத்தியா...?? இப்போ யார ஓடவைக்க போறாங்களோ..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக நடந்து முடிந்த ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதில் கலந்துகொண்ட முக்கிய நடிகை தான் மாயா கிருஷ்ணன்.

பிக் பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்ட இவர், நடிகையாக மட்டுமின்றி மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்ட ஒருவராகவும் காணப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதற்காக பல்வேறு சர்ச்சைகளும் சிக்கிக் கொண்டார்.

அதில் மிக முக்கியமாக பிரதீப் அன்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில்  இருந்து வெளியேற முக்கிய காரணமே மாயா, பூர்ணிமா தான் என்ற கருத்து தற்போது மட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


அதிலும் அவர்கள் கூறிய பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என பலரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது மாயாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது .


அதாவது இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவதால் நான் இன்று வுமன்ஸ் காட்டை பயன்படுத்தலாமா என்பது போல் ஸ்டோரி ஒன்றை  குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இவரின் இன்ஸ்டா ஸ்டோரி சோசியல் மீடியாவில் வைரலாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement