• Jun 23 2024

தளபதி விஜய்யை பின்பற்றுகிறாரா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் .. அதிரடியான அறிவிப்பு..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் கடந்தாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழக அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசுத்தொகை வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா குறித்த தேதியும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 10, 12 வகுப்பு பொது தேர்வில் தமிழில் 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா என்று அறிவித்துள்ளார்.

ஜூன் 14ஆம் தேதி அரசு சார்பில் மாணவர்களுக்கு இந்த பாராட்டு விழா நடைபெறும் என்றும் இந்த பாராட்டு விழாவுக்கு தகுதியுடைய மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஒரு பக்கம் தளபதி விஜய் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம் குறித்த தேதியை சமீபத்தில் அறிவித்தார் என்பது தெரிந்தது. ஜூன் 28ஆம் தேதி சென்னை உட்பட சில மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும், ஜூலை 3ஆம் தேதி மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை பார்க்கும்போது அவர் தளபதி விஜய்யை அவர் பின்பற்றுகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement