• Jan 07 2026

விஜய்க்காக வானுயர்ந்த கொடிக்கம்பத்தில் இத்தனை சிறப்பம்சமா? 25 வருசத்துக்கும் பலே பிளான்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுவதோடு தற்போது கோடிக்கணக்கான தொண்டர்களும் உருவாகியுள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படும் விஜய், ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெரிதாக பேசிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனேகமான படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் விஜயின் முகத்தை பலரும் உருவக்கேலி செய்தார்கள்.

இதைத் தொடர்ந்து விஜய், விஜய்காந்துடன் இணைந்து நடித்த செந்தூரப் பாண்டியன் திரைப்படம் இவருக்கு நல்லதொரு பெயரை பெற்று கொடுத்தது. அதன் பின்பு படிப்படியாக தனது உழைப்பின் காரணமாக முன்னேறிய விஜய் இன்று யாராலும் அசைக்க முடியாத ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

d_i_a

யாரெல்லாம் ஆரம்பத்தில் விஜயின் முகத்தை வைத்து உருவக்கேலி செய்தார்களோ அதையே தனது அடையாளமாக்கி இன்று பலரும் காண துடிக்கும் ஒரு முகமாக விஜய் காணப்படுகின்றார். சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியல் களத்திலும் நுழைந்த விஜய்க்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் நுழைந்த விஜய், நாளைய தினம் முதன்முதலாக தனது கட்சி மாநாட்டை நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவரான விஜய் ஏற்றவுள்ள கொடிக்கம்பத்தின் சிறப்பம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது.


அதாவது குறித்த  கொடிக் கம்பம் 101 அடியை கொண்டதாகவும் 20 அடி உயரம்,  30 அடி அகலம் அளவில் கொடி காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொடிக் கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 6 அடி உயரத்திற்கு கல்வெட்டு வைக்கப்பட உள்ளதோடு ரிமோட் மூலமாக கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். சுமார் 25 வருடங்கள் கொடிக்கம்பம் துருப்பிடிக்காமல் இருக்கும் வகையில் வேதியல் மூலாம் பூசப்பட்டுள்ளது.

குறித்த  கொடிக்கம்பம் 10 ஆண்டுகள் அங்கேயே இருக்கும் வகையில் நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தற்போது கொடிக்கம்பத்தின் சிறப்பம்சங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement