இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் லண்டனில் குடியேற இருப்பதாக அவருடைய சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியிருக்கிறார். இந்த விடையம் விராட் மற்றும் அனுஷ்கா சர்மா ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏற்கனவே ஓய்வு நேரத்தில் லண்டனில் குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து வருகிறார். இவரின் இரண்டாவது குழந்தையும் லண்டனில் கடந்த பிப்ரவரி மாதம் பிறந்தது. இந்நிலையில் விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ஆன ராஜ்குமார் சர்மா பேட்டி ஒன்றில் விராதட் கோலி பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் "விராட் கோலி தனது குழந்தை மனைவியுடன் லண்டனில் குடியேற போகிறார். அவர் இந்தியாவை விட்டு செல்ல போகிறார். தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுக்க அவர் விரும்புகிறார். இதற்காக இந்த முடிவை விராட் கோலி எடுத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். இந்த விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!