• Jan 19 2025

’பாண்டியம்மா’ இந்திரஜாவின் கல்யாண பிசினஸ்.. உச்சகட்ட வெறுப்பில் பத்திரிகையாளர்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்த இந்திரஜா அதன்பின்னர் 'விருமன்’ படத்தில் நாயகி அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார் என்பதும் அதன் பின்னர் சில வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திரஜா தனது திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலுக்கு விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது. அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்திரஜாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முழுக்க முழுக்க எங்களுக்கு உரிமை பெற்றது என்றும் வேறு ஊடகங்கள் அதை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனால் பத்திரிகையாளர்கள் மற்றும் இணையதள உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஒரு பிரபலத்திற்கு திருமணம் என்றால் அந்த பிரபலத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய திருமண புகைப்படங்களை வெளியிடுவது தான் ஊடக தர்மம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டும் திருமணம் குறித்து அனைத்து புகைப்படம், வீடியோ உரிமைகளையும் விற்று விட்டால் அந்த ஒரு நிறுவனத்தின் வாழ்த்து மட்டும் கிடைத்தால் உங்களுக்கு போதுமா? மற்றவர்களின் வாழ்த்து தேவை இல்லையா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

மேலும் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் நிலையில் திருமணத்தை கூட வியாபாரமாக பார்க்க வேண்டுமா என்றும் பலர் இந்திரஜாவுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பெரிய பெரிய நடிகைகளே தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இலவசமாக வெளியிட்டு வரும் நிலையில் இரண்டு படங்களில் மட்டும், அதுவும் குட்டி கேரக்டரில் நடித்த நடிகை ஒட்டுமொத்தமாக தனது திருமணத்தை வியாபாரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement