• Jan 19 2025

உன் கவலைக்கு நான் காரணமல்ல.. ஆர்த்திக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பாடகி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலின் சின்னமாக  வாழ்ந்து வந்தவர்கள் தான் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி. ஆனால் தற்போது அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து ஆர்த்தி விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தனியாகத்தான் எடுத்தார் என்று சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.. ஆனாலும் நேற்றைய தினம் ஜெயம் ரவி வழங்கிய பேட்டியில் ஏற்கனவே ஆர்த்திக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், தனது பெற்றோரும் ஆர்த்தியின் பெற்றோரும் இந்த விவகாரத்து தொடர்பில் கலந்து ஆலோசித்தே  முடிவு எடுத்ததாகவும், தற்போது ஆர்த்தியை ஏன் இப்படி சொல்கின்றார் என தனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் குறித்த பாடகி ஆதரவற்றவர். அவருக்கும் எனக்கும் தொடர்பு என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. அவர் பலரின் மனநோயை குணப்படுத்தி உள்ளார். அவருடன் இணைந்து ஆன்மீக மையம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். இது பிடிக்கவில்லை என்று தான் இப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை எனவும் தன்னிடம் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதுவரையில் அமைதியாக இருந்த பாடகி கெனிஷா, ஜெயம் ரவியின் பேட்டிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர் கூறுகையில், என்ன மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்டிங்க.. உங்களுக்கு கொஞ்சமாவது நாகரீகம் இருக்கா? இப்போ ஜெயம் ரவி என்ன பதிலடி கொடுத்திருக்கிறார் பாருங்கள்.. இனிமேலாவது உங்களுடைய மனதை அமைதியாக வச்சுக்கோங்க.. ஏனென்றால் உங்கள் மனதில் உள்ள காயத்திற்கு உங்கள் எதிரி காரணம் இல்லை.. நீங்கள் ஒருத்தரை நேசிப்பதாக சொல்லிக்கிட்டு இருந்தீர்களே அவரால் ஏற்பட்டது என்று ஆர்த்திக்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார்..

மேலும் உங்கள் கட்டுப்பாட்டில் ஜெயம் ரவி பாதுகாப்பாக இருக்கின்றாரா? என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, நீ பாதுகாப்பாக இருக்கியா? உனது நண்பர் பாதுகாப்பா இருக்காங்களா என்று பாரு என அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார்..

Advertisement

Advertisement