• Nov 05 2024

பிரியங்கா சப்போர்ட்டஸை சொம்பு என விமர்சித்த மணி! செருப்படி பதிலளித்த குரேஷி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து  வழங்கும் தொகுப்பாளினிகள் தான் மணிமேகலை மற்றும் பிரியங்கா. மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் குக்காக செயற்படும் ஒருவர் தன்னை வேலை செய்ய விடாமல் இடையூறு செய்வதாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

இதன் காரணத்தினால் இதற்கு காரணம் பிரியங்கா தான் என்று அவருக்கு எதிராக பலர் குரல்கள் எழுப்பி வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்தவர்கள் அங்கு நடந்தவற்றை வீடியோ மூலம் வெளியிட்டார்கள்.

அதில் திவ்யா துரைசாமி எலிமினேட் ஆனபோதே இந்த பிரச்சனை ஆரம்பமானது. அவர் எலிமினேட் ஆகி போகும்போது பிரியங்கா பேசுவதற்கு கேட்டதாகவும் அதற்கு மணிமேகலை மறுத்ததாகவும் இதனாலையே இந்த பிரச்சனை தொடரப்பட்டது எனவும் கூறியிருந்தார். இவ்வாறு குக் வித் கோமாளியில் பங்கு பற்றிய பிரபலங்கள் பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை என கூறி வந்தார்கள்.


மணிமேகலை மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணியவர்கள் சொம்பு என பேசி இருந்தார். இந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த குரேஷி, எனக்கு ஒரு பாலிசி இருக்கின்றது. உங்களுடைய சுதந்திரம் என்னுடைய மூக்கி நுனி வரை தான். என் மூக்கை தொடுவது இல்லை. அதை நீங்கள் மெயின்டன் பண்ணா நம்ம பிரண்ட்ஷிப்புக்கு எந்த பிராப்ளமும் வராது என பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்தவர்களை சொம்பு என விமர்சித்த மணிமேகலைக்கு பதில் அளித்துள்ளார்.


Advertisement

Advertisement