• Jan 19 2025

துப்பாக்கியை கரெக்டா ஹேண்டில் பண்ணனும்..! சிவகார்த்திகேயன் காட்டிய மாஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக காணப்படுபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் இறுதியாக விஜய் நடித்த கோட் படத்தில் கேமியா ரோலில் வந்து அசத்தியிருப்பார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குறிப்பாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் சிவகார்த்திகேயன். அதன்பின்பு திரைப்பட வாய்ப்புகள் குவிய  காமெடியில் கலக்கி வந்தார்.

எதிர்நீச்சல் படத்தின் ஊடாக கதாநாயகனாக உருவெடுத்தார். அதன் பின்பு தனக்கேற்ற திரைக் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இன்னொரு பக்கம் இளையதளபதி விஜய் அரசியலில் நுழைந்துள்ளதால் அவருடைய இடத்திற்கு சிவகார்த்திகேயன் தான் வர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் அடுத்த தளபதி எஸ்கே தான் என உசுப்பேத்தி வந்தார்கள்.


இதைத் தொடர்ந்து கோட் படத்தில் இளையதளபதி விஜய் தனது கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கைக்கு கொடுத்து இருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசும் பொருள் ஆனது. அதில் அவர் மிக முக்கியமான வேலையா  போறீங்கன்னு எனக்கு தெரியும்.. அத நீங்க கவனிங்க இத நான் பார்த்துக் கொள்கிறேன் என சிவகார்த்திகேயன் டயலாக் விட்டிருப்பார்.

இந்த நிலையில் தற்போது அமரன் படத்தில் அறிமுக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், துப்பாக்கியின் கணம் எப்படி உள்ளது என கேள்வி எழுப்ப, அதற்கு சிவகார்த்திகேயன் துப்பாக்கி கனமா தான் இருக்கும் அத கரெக்டா ஹேண்டில் பண்ணனும் என மாஸ் ஆக பதில் அளித்துள்ளார் தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement