• Jan 18 2025

பல பேருடன் ரிலேஷன்சிப்பில் இருந்திருக்கிறேன், அதை மறைக்க முடியாது- உண்மையை உடைத்த நடிகை அதிதி பாலன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அருவி என்னும் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்துள்ளார். தங்கர் பச்சான் இயக்கத்தில் சமீபத்தில் இவர் நடித்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் வெளியானது.

இறுதியாக தனுஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது.


இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை ஓபனாகப் பேசிள்ளார். அதில்  நான், " பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன். பக்கத்து ஸ்கூல் பையனை காதலித்தேன் அவருடன் பிரேக் ஆகிவிட்டது".

"அதன் பின்னர் நான் பல பேருடன் உறவில் இருந்தேன். இது பற்றி பொய் சொல்ல முடியாது. என் குடும்பத்திற்கும் இந்த விஷயம் தெரியும். சில உறவுகளில் என்னை டார்ச்சர் செய்து உள்ளனர். நானுமே டார்ச்சர் செய்ததன் விளைவு தான் பல பிரிவுகளுக்கு காரணம்".


"இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு மோசமான கமெண்ட்டுகள் வரும் நான் கண்டுக் கொள்ள மாட்டேன். ஆனால், அதையெல்லாம் என் அப்பா பார்த்து படித்துவிட்டு ரிப்ளை செய்வார்" என்று அதிதி பாலன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    


Advertisement

Advertisement