• Jan 30 2026

பிக்பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் இவர் தான்- 2வது,3வது இடங்களைப் பெற்றது யார் தெரியுமா?- வெளியாகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான கிராண்ட் பினாலே எப்பிஷோட் நாளைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது.105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெற்றிகரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி ஆகிய ஐந்து பேர் தான்.

 இவர்களில் ஒருவர் தான் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட உள்ளார்.இந்த நிலையில் இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் தொடங்கியது. 


கமல்ஹாசன் கலந்துகொண்ட ஷூட்டிங், தற்போது வரை போய்க் கொண்டு இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும் மூன்றாவது இடம் மாயாவுக்கும் கிடைத்துள்ளது. முன்னதாக தினேஷ், விஷ்ணு ஆகிய இருவரும் வாக்குகள் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும்  வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement