• Jan 19 2025

பா.ரஞ்சித் தயாரிக்கும் "பாட்டல் ராதா" பெஸ்ட் லுக் போஸ்டர் எப்படியிருக்கு ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

நீலம் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் மூலம் பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் "பாட்டல் ராதா" என பெயரிடப்படுள்ளது.நேற்றைய தினம் நீலம் வெளியீட்டின் உத்தியோகபூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பெயரும் பெஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்றுள்ளது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ஃபீல் குட் திரைப்படம் - அசத்தல் அப்டேட் |  P. Ranjith Produced Feel Good Movie - Released Update

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தினகரன் சிவலிங்கம் இயக்கும் முதல் திரைப்படமான இப் படத்திற்கான பாத்திர தேர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குட் நைட் படத்தின் இசையைப்பாளர் ஷான் ரோல்டன் இப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

Neelam Productions | We are enthralled to let you all know, that the  Malayalam First Look of our Production #9 will be unveiled by everyone's  favourites:… | Instagram

நேற்றைய தினம் வெளியான தலைப்பு மற்றும் பெஸ்ட் லுக் போஸ்டர் ரசிர்கர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.மது பாட்டிலுக்குள் குரு சோமசுந்தரம் மதுவை கையில் ஏந்திக்கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் வகையில் அமைந்திருக்கும் பெஸ்ட் லுக் போஸ்டர் ஒரு சமூக கருத்தை படம் சொல்லவிருப்பதை உறுதி செய்கிறது.



Advertisement

Advertisement