• Jan 19 2025

விஜய்க்கு இன்னொரு தங்கச்சி பிறந்தாச்சு.. எமோஷனலான விஜய்யின் பெற்றோர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருவதோடு, தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் கொண்டு நடத்தி வருகின்றார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேராகவே சென்று சந்தித்த விஜய், இதன் காரணத்தால் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை கைவிடுமாறு தனது கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு சினிமாவிலும் அரசியல் வாழ்க்கையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் மாறாத வடு என்றால் அது அவருடைய தங்கச்சியின் மரணம் தான். அதனை ஒரு சில பேட்டிகளிலும் எமோஷனலாக கூறியுள்ளார்.


இந்த நிலையில், பிரபல சேனல் ஒன்றில் கலந்து கொண்ட விஜயின் தந்தையும் தாயும், அங்கு வந்திருந்த தம்பதியினரின் குழந்தைக்கு தமது உயிரிழந்த மகளின் பெயரை வைத்து கலங்கியுள்ளனர். 


அதன்படி விஜய்யை பெத்த தங்கங்கள் தான் என் தங்கத்துக்கும் பெயர் வைக்கணும் என சென்ற தம்பதியினருக்கு, குழந்தையை பார்த்த விஜயின் அம்மா, குழந்தை என் பொண்ணு போலவே இருக்குது என்று சொல்லி வித்யா என்ற பெயர் வைத்துள்ளார். தற்போது இந்த தொடர்பிலான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இதை பார்த்த ரசிகர்கள், விஜய்யின் தங்கச்சி திரும்பவும் பிறந்தாச்சு என கமெண்ட் பண்ணி வாழ்த்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement