• Feb 19 2025

ஜோடி போட்டு மேடையில் ஆட்டம் போட்ட சவுந்தர்யா -விஷ்ணு...! வைரல் வீடியோ இதோ...

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 8 இன் ரன்னர் சவுந்தர்யா தற்போது அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராக மாறியுள்ளார்.மிகவும் அருமையாக விளையாடி மக்கள் மனதை வென்ற போட்டியாளராக இருக்கும் இவர் சமீபத்தில் பல நேர்காணல்கள் நிகழ்வுகள் என பல இடங்களில் கலந்து வருகின்றார்.


இந்த நிலையில் வீட்டிற்குள் இருக்கும் போது freeze டாஸ்க்கில் அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார். அதாவது இவரது நண்பனும் கடந்த சீஸனின் போட்டியாளருமாகிய நடிகர் விஷ்ணு வீட்டிற்குள் வந்த போது தட்டு ஒன்றில் அரிசியில் மிகவும் அழகாக marry me என எழுதி தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார்.


சவுந்தர்யாவின் முக பாவனைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை தங்களது காதலை தற்போது இருவரும் வெளியிலும் உறுதிப்படுத்தி வருகின்றனர். வெளியில் வந்ததும் இருவரும் outing போன புகைப்படங்களும் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக இருவரும் நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.மற்றும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்பதையும் சவுந்தர்யாவே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement