• Feb 16 2025

பிரதீப் ரங்கநாதனை குறிவைத்துள்ள இயக்குநர் மிஷ்கின்..!

Mathumitha / 8 hours ago

Advertisement

Listen News!

கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் "லவ் டுடே " எனும் சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இளசுகளின் பேவரிட் ஆக இருக்கும் இவர் தற்போது "dragon ","lik " எனும் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.


"dragon " படம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப் படத்தின் trailor வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. இவரின் நண்பன் அஷ்வத் மாரிமுத்து இந்த படத்தினை இயக்கியுள்ளதுடன் அனுபாமா ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது இயக்குநர் மிஷ்கின் dragon பட இசை வெளியீட்டு விழாவில் பிரதீப் குறித்து "பிரதீப் ரங்கநாதன் புரூஸ் லீ-யை போன்றவர். இதுவரைக்கும் அவன் ஆக்சன் படம் பண்ணவில்லை. என் இயக்கத்தில் பண்ணுவான் என்று நினைக்கிறேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு சினிமாவுல ஒரு இளம் ஸ்டார் பார்க்கிறேன். யாரும் கைகொடுத்து அவரை தூக்கி விடல. எல்லாம் அவர் உழைப்பு." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement