• Mar 31 2025

மீடியாக்களை அனுமதிக்காத அமரன் படக்குழு..! காரணம் என்ன?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

அமரன் திரைப்படத்தின் 100 ஆவது நாள் வெற்றி விழா கலைவாணர் அரங்கில் மிகவும் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கமல்காசன் ,சிவகார்த்திகேயன் ,சாய்பல்லவி, ராம்குமார் பெரியசாமி என பல சினிமா பிரபலங்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.


கடந்த ஆண்டு வெளியாகிய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த விடயங்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டமையினால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. ஏறத்தாள 300 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளது. 


இதனை சிறப்பிக்கும் விதமாகவும் இப் படத்தில் பணியாற்றிய படக்குழுவினை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது இவ் நிகழ்ச்சிக்கு கமல்காசன் மீடியாக்களினை அனுமதிக்கவில்லை எனும் புகார் கிளம்பியுள்ளது. 


இவ் நிகழ்ச்சி உரிமத்தினை சாட்லைட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமையினாலே மீடியாக்களின் கேமராக்களினை நிகழ்ச்சிக்கு அனுமதிக்கவில்லை எனும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. மற்றும் இப் படம் வெற்றி அடைந்ததற்கு மீடியாக்களும் ஒரு விதத்தில் காரணமா இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement