• Nov 23 2025

விரைவில் திரைக்கு வரும் துருவநட்சத்திரம்... முதல் திரை விமர்சனம் இதோ...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

2016 ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த படம் 2018ல் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது இருந்து பல வருடங்களாக கிடப்பில் இருந்த அந்த படத்தை தற்போது திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 24,2023 அன்று படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இன்னும் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால் இன்னும் ரிசர்வேஷன் துவங்கவில்லை. 


கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் முழு படத்தையும் இயக்குனர் லிங்குசாமி மும்பையில் பார்த்திருக்கிறார். படத்தினை பற்றி அவர் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


துருவ நட்சத்திரம் படத்தின் பைனல் கட் மும்பையில் பார்த்தேன். படம் அற்புதமாக இருக்கிறது. காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். சீயான் கூலாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விநாயகன் தான் மிரட்டி இருக்கிறார். பெரிய cast என்றாலும் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறாரகள்." கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போவில் இது இன்னொரு gem என லிங்குசாமி  தனது டுவிட் பதிவில் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement