பிரபல நடிகை திரிஷா குறித்து கேவலமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடயம் குறித்து பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் கீழ்த்தனமாக அவர் பேசினார்.இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். இதன்பின் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, நடிகை த்ரிஷாவப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. மேலும் இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மகளிர் ஆணையம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறது என நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொந்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இப்படியான நிலையில், மன்சூர் அலிகான் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், 'நான் எந்த பெண்களையும் தவறாக நினைக்க மாட்டேன். எல்லோரையும் அரவணைத்து தான் செல்வேன். தமிழ்நாடே என் பக்கம் தான் உள்ளது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா? . மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், காரைக்குடியில் ஷர்மா குஷ்பூ பற்றி அவதூறு பேசினார்களே. அவர்கள் பாஜகவில் தானே இருக்கிறார்கள். கைது பண்ண சொல்ல வேண்டிதானே. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துக் கொள்ளும் போதும் இந்த மகளிர் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது. வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தா நீ தூக்கு மாட்டி சாவு.
மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டப்போது என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா?. ஒழுங்கா நடந்துகோங்க. நான் எந்திரிச்சா ஒரு பிரளயமே கிளம்பும்' என குறித்த சந்திப்பில் மன்சூர் அலிகான் இவ்வாறு தெரிவித்தார்.
Listen News!