• Nov 19 2025

ரவி மோகனின் வீட்டிற்கு ஒட்டப்பட்ட ஜப்தி நோட்டீஸ்... நடந்தது என்ன.? முழு விபரம் இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டிற்கு தற்பொழுது தனியார் வங்கி நிர்வாகத்தினால் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் வசிக்கும் சொகுசு வீடு கடன்செலுத்தாத காரணத்தால் வங்கி நிர்வாகம் கடைசியாக எடுத்த நடவடிக்கை என்று தகவல் கிடைத்துள்ளது.


நடிகர் ரவி மோகன் கடந்த சில காலங்களாக தனியார் வங்கியிடம் வீடு வாங்கியதற்கான கடன் தொகையை பூர்த்தி செய்யவில்லை. இதனால் வங்கியின் கோரிக்கை பல முறையும் புறக்கணிக்கப்பட்டது. கடைசியாக, இந்த நிலைமை குறித்து வங்கி நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்தது, அந்த வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொகுசு பங்களா என்ற பெயரில் ஈசிஆர் பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு வங்கி ஊழியர்கள் நேரில் வந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த வீட்டிற்கு உரிமையுள்ள ரவி மோகனுக்கு கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி கடுமையாக நிபந்தனை வைத்துள்ளது.


தனியார் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு முன்பாக, ரவி மோகன் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறாரென அறிவித்தார். இந்த விவகாரம் காரணமாக அவர் வீட்டிற்கு செல்லாது உள்ளார். இதனாலேயே அவர் கடன் தொகையை செலுத்தவில்லை எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement