இந்திய சினிமாவின் மிக முக்கியமான மரியாதை எனக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. 71வது தேசிய விருதுகளில், பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' (Vaathi) திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, GV பிரகாஷ் ஒரு பேட்டியில் தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் GV பிரகாஷ், "எனக்கு ‘வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. இது என் இரண்டாவது தேசிய விருது, அதனால் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பட வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குநர் வெங்கி ஆட்லூரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அதேபோல ஹீரோ தனுஷ் சாருக்கும், என்னை நம்பிய என் ரசிகர்களுக்கும் என் நன்றிகள்!" என்றார்.
2023ல் வெளிவந்த 'வாத்தி' தனுஷ் நடித்த ஒரு சமூக நல்லிணக்கம் பேசும் கல்லூரி சார்ந்த படம். இந்த திரைப்படம், இளைய தலைமுறையை சென்றடையும் வகையில் அமைந்திருந்தது. மேலும், இந்த ‘வாத்தி’ திரைப்படத்தில் GV பிரகாஷ் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!