• Jul 27 2024

ஜெயம் ரவிக்கு இவர் தான் சரியான ஆளு.. மணிரத்னத்தின் வாய்ப்பை தட்டித் தூக்கிய மாஸ் ஹீரோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படம் தொடர்பில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்புதான் 'தக் லைஃப்' படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருந்தார். அதற்கு காரணம் ஜெயம் ரவிக்கு அந்த படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், துல்கர் சல்மானின் கேரக்டர் டம்மியாக காணப்பட்டது  என்பதாலும் அவர் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.


அவரை தொடர்ந்து ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் குளறுபடிகளால் தான் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், தற்போது 'தக் லைஃப்' படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிப்பதற்கு இணைந்துள்ளாராம். இதற்கு முன்னர் மணிரத்தினம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அருண் விஜய், தற்போது இரண்டாவது முறையாகவும் அவர்கள் கூட்டணியில் இணைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏற்கனவே ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த் சாமி, அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement