• Jan 19 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த குட் நியூஸ்..?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 70 வயதை கடந்த போதும் தற்போது ஹீரோவாக நடித்து பட்டைய கிளப்பி வருகின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வேட்டையன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் எதிர்வரும் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான மனசிலாயோ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. 

வேட்டையன் படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகியது. இந்த டிரைலர் மொத்தமாக தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளி விடப்பட்டுள்ளதாம்.


வேட்டையன் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நேரத்தில் மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பற்றி வந்த நிலையில், நாளைய தினம் டிஸ்டார்ச் ஆகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement