• Feb 27 2026

வீர தீர சூரன் படத்தில் வைத்த டுவிஸ்ட்! முதல் பாகம் 2 தான் ரிலீஸ்! ரகசியம் உடைத்த இயக்குநர்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன். இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இப்படத்திற்காக 10 நாள்கள் ஒத்திகை பார்க்கட்டு எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி ஒன்றைக் குறிப்பிட்டு கலைத்தாயின் இளைய மகன் என இயக்குநர் அருண் குமாரை எஸ். ஜே. சூர்யா பாராட்டியிருந்தார். முதலில் வீர தீர சூரன் 2 படம்தான் வெளியாகிறது. படம் நேரடியாக சண்டையில் தொடங்குகிறது. அதற்கான காரணம் முதல் பாகத்தில் இருக்கிறது. அந்தப் படம் பின்னர் வெளியாகும்.


விக்ரம், துஷாரா அல்லாத எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் இருவரும் படத்தில் புதியதாக இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை நடிக்காத படமென கூறுகிறார்கள். சிறந்த படப்பிடிப்பாக இந்தப்படம் இருந்ததாகவும் சொல்கிறார்கள். சட்டை அழுக்குடன் இருந்தாலும் விக்ரம் சார் எதுவும் சொல்வதில்லை. குளோசப் காட்சிகள் படத்தில் இல்லை.  முதுகுக்கு பின்புறம் காமிரா வைத்தாலும் நடிக்க தயாராகாவிருக்கிறார் என்று இயக்குநர் சு. அருண்குமார்கூறியுள்ளார். 

Advertisement

Advertisement