• Nov 05 2024

நீங்க ரெண்டு பேரும் ஒன்னா போடுற ஆட்டம் கோபிக்கு தெரியுமா?? மரண மாஸ் சம்பவம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் குடும்பத் தலைவியாக பாக்கியா காணப்படுகின்றார். அவர் தனது கணவரை பிரிந்து பிள்ளைகள்  உடனும் தனது கணவனின் பெற்றோருடனும் வாழ்ந்து வருகின்றார். இடையில் அவர் பிள்ளைகளுக்காக படும் கஷ்டம், பிள்ளையின் பிரச்சனைகளுக்காக தீர்வு கண்ட விதம், தொழில் ரீதியாக அவர் எதிர்கொண்ட தடைகள் என ஒவ்வொன்றையும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி சென்றது.

இதன் காரணத்தினால் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலரும் பெரும் ரசிகராக காணப்பட்டார்கள். அதிலும் எந்த சூழ்நிலையிலும் பாக்கியா போல வெற்றி நடை போட வேண்டும், எதிலும் தளர்ந்து  இருக்கக் கூடாது என்று பலர் இந்த சீரியல் பற்றி பெருமையாக பேசியுள்ளனர்.

தற்போது இந்த சீரியலில் ராமமூர்த்தி உயிரிழந்த நிலையில், அவர் இல்லாத பாக்கியாவின் இல்லம் எவ்வாறு தமது நாட்களை கடந்து செல்கின்றது என்பதை மிகவும் சோகமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றனர். ஆனாலும் கோபி தனது அப்பா இறந்தபோதிலும் அவர் மீது வெறுப்பு காட்டுவதில் குறியாக உள்ளார்.


இதற்கெல்லாம் காரணம் பாக்யா தான் என்றும் அவரை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்றும் சபதம் எடுத்துள்ளார். அத்துடன் இந்த சீரியல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாகவும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் கோபியின் மனைவிகளாக காணப்படும் பாக்கியாவும் ராதிகாவும் ஒன்றாக ரில்ஸ் செய்துள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement