பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனது தனித்துவமான குரலால் தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும், வானொலி அறிவிப்பாளராகவும் பன்முகத் திறமை கொண்டு திகழ்ந்தார்.
எனினும் சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கு பிறகு தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். சமீபத்தில் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அவர் என்னை ஏமாற்றி விட்டார் எனவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் .
மேலும் பிரபல நடிகர், நடிகைகளை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததோடு அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றியும் பல விடயங்களை பேட்டி கொடுத்து வருகின்றார். இதனால் சுசித்ரா மீது பலரும் தங்களுடைய வெறுப்புகளை கொட்டத் தொடங்கினர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சபரிக்கு ரெக்கார்ட் கொடுக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், பார்வதியை ஷூ காலால் மிதித்த போதும், அவர் விழுந்து விடாமல் மீண்டும் தனது விளையாட்டை தொடர்ந்தார். ஆனால் சபரி மீண்டும் மீண்டும் அவரை தாக்கத்தான் செய்தார். ஒரு பெண் கம்பீரமாக விளையாடுவது குற்றமா? அந்த நேரத்தில் கனி கூட பார்வதியை தவறாகத்தான் சித்தரித்தார். நீங்க உங்க செருப்பை கழட்டி வைத்துவிட்டு சபரியின் ஷுவால் அடி வாங்குங்க அப்பத்தான் உங்களுக்கு தெரியும்.
விஜய் சேதுபதி கூட, ஏன் பார்வதிய தள்ளி விட்டீங்க என்று சபரியை பார்த்து சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க என்று கேட்டார். ஆனால் இறுதியில் அவரை உட்காருங்கள் என்று சொல்லிவிட்டார். எல்லோரும் நல்லா நடிக்கிறாங்க.. அதேபோல விஜய் சேதுபதியும் மேடையில் நல்லா நடிக்கின்றார் என்று கூறியுள்ளார்.
Listen News!