விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் இந்த வாரம் கனியும், திவாகரும் வெளியேறி உள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களாகவே கனி திரு இந்த வாரம் வெளியேற போவதாக செய்திகள் பரவி வந்தன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல திவாகரும் கடந்த வாரம் தன்னுடைய பேச்சுக்கள், செயல்கள் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
சில தினங்களுக்கு முன்பு கேமரா முன்னாடி பேசிய திவாகர், இந்த உலகத்திலேயே எனக்குத் மட்டும் தான் நடிக்க தெரியும். ரஜினிக்கு வயதாகிவிட்டது. விஜய் அரசியலுக்கு போயிட்டார். அஜித் ரேஸுக்கு போயிட்டார். தமிழ் சினிமாவை நான் தான் காப்பாற்ற போகின்றேன் என்று பேசினார். இதனால் கேமரா தலையை திருப்பியது.

இதனால் இவர் கடைசி வரை இருந்தால் தன்னுடைய பெருமைக்காகவே அடுத்தவர்களை பலிகாடாக மாற்றுவார் என்றும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 42வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி திவாகரை வைச்சு செய்துள்ளார். அதன்படி திவாகரை பார்த்து விஜய் சேதுபதி, உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பதவி வேண்டாம், இந்த கெட்டப் வேண்டாம் என்று அதை ரிஜெக்ட் பண்ணினீங்க. அந்த உரிமையை யார் கொடுத்தது? பதில் சொல்லுங்க.. அதுவரைக்கும் நான் மேடையில் அமருகின்றார் என்றார்.
மேலும் தமிழ்நாட்டில் நான் பேசும் டயலாக் ரொம்ப பிரபலம்.. கேமரா என்ன பாருங்க, என்று பேசுறீங்க, அது நான் கொடுத்த டாஸ்கா? ஒழுங்கா ஒரு டாஸ்க் பண்ண வக்கில்ல, கேமரா முன்னாடி ரீல்ஸ் பண்ணிட்டு இருக்க என்று திவாகரை சரமாரியாக திட்டியுள்ளார்.
Listen News!