தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் கயாடு லோஹர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா முரளியுடன் ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘இம்மார்ட்டல்’, மற்றும் சிம்புவின் 49வது படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என்று பிசியாக நடித்து வருகின்றார் கயாடு லோஹர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கயாடு லோஹரிடம் நடிகைகளுக்கு ஏற்படும் உருவக் கேலி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், நாங்கள் எங்கு சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அதில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால் நாம் மற்றவர்கள் மீது கருணையுடன் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரின் உடல் அமைப்பு வெவ்வேறு விதமாக இருக்கும். அதனை புரிந்து கொள்ள வேண்டும். ஒரே மாதிரி இருந்தால் தனித்துவம் என்பது இருக்காது என்று தெரிவித்தார்.
Listen News!