ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் இன்றைய தினம் வெளியான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரனுடன் எஸ்.கே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இந்தியன் 2 படத்தில் தோல்வியை தழுவிய சங்கர், இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படமும் சொதப்பலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.
d_i_a
மேலும் இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார் என கூறப்பட்ட போதும், இந்த படம் ஷங்கரின் முதல்வன் படம் போல் உள்ளதாகவும் படத்தில் சுவாரஸ்யம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றார்கள்.
இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ஹைலைட்டே அஞ்சலி உடைய கதாபாத்திரம் தான் என்று வலைப்பேச்சு அந்தணன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், இந்தியன் 2 படத்தில் சரிவை சந்தித்தார் ஷங்கர். இதனால் கேம் சேஞ்சர் ஷங்கர் படத்தை இயக்குகின்றார் என்ற தகவல் அறிந்ததும் பலரும் அவசரப்பட்டுட்டீர்களே, ஷங்கரை வைத்து படம் பண்ணுகின்றீர்களே, நீங்களும் காலி கேம் சேஞ்சர் படமும் காலி என்று தயாரிப்பாளர் தில்ராஜை தெலுங்கு சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பயமுறுத்தி உள்ளனர்.
இந்த விஷயம் ஷங்கரின் காதுக்கு போக அவர் கேம் சேஞ்சர் படத்தில் உள்ள சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார். அதில் அஞ்சலியின் காட்சிகள் ஹைலைட்டாக காணப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த படத்தில் தில்ராஜ் தைரியமாக நம்பி இறங்கியுள்ளாராம்.
அதனாலயே இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்ததாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!