• Jan 15 2025

இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம்..! நடிகை த்ரிஷா வீட்டில் திடீரென நிகழ்ந்த மரணம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகையாக த்ரிஷா காணப்படுகின்றார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

35 வயதை கடந்த த்ரிஷா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் செல்லப்பிராணிகளுடன் இருக்கும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அதிகமாக இணையதள பக்கங்களில் வெளியிட்டு வருவார். தெரு நாய்களை தத்தெடுக்க தனது ரசிகர்களையும் ஊக்குவித்து வருகின்றார். 

d_i_a

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் தினமான இன்றைய தினத்தில் திரிஷா வளர்த்த ஜோரோ என்ற நாய் உயிரிழந்துள்ளது. இதை எண்ணி திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களுடன்  தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.


அதில் அவர் கூறுகையில், என்னுடைய மகன் ஜோரோ கிறிஸ்மஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நானும் எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்து போய் உள்ளோம். எனவே பணியில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்து உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் திரிஷா தனது செல்லப் பிராணி மீது கொண்ட பாசத்தையும் அதனால் அவருக்கு ஏற்பட்ட வேதனைக்கும் தம்மால் இயன்ற ஆறுதலை சொல்லி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement