பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார்கள்.
இதன்போது சௌந்தர்யாவின் அம்மா கூறுகையில், நட்பா பழகுறவங்கள சந்தேகப்படக்கூடாது. ஒருத்தங்க மேல ஏதாவது பிரச்சனை இருந்தால் அவங்க கிட்ட நேரா போய் பேசணும். பின்னாடி பேசக்கூடாது..
d_i_a
ஜாக்குலின் கூட உன் நட்பு பார்க்க அவ்வளவு அழகா இருக்குது. ஆனா அதை சரியா பயன்படுத்திக்க உனக்கு தெரியல என்று சௌந்தர்யாவின் அம்மா தெரிவித்துள்ளார் .
மேலும் சௌந்தர்யா வீட்டுல இப்படி இருந்தது இல்ல.. ஆனா இங்க வந்ததும் ரொம்ப மாறி இருக்கா.. அது உங்க எல்லாரையும் பார்த்துத் தானோ என தெரியல என்றும் சொல்லுகின்றார்.
அதேபோல சௌந்தர்யாவின் அப்பாவும் தனக்கு தீபக், ஜாக்குலினின் கேம் பிடித்திருப்பதாகவும், சௌந்தர்யாவும் நல்லாத்தான் விளையாடுறா.. ஆனால் சில விஷயங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லுகின்றார்.
Listen News!