• Mar 16 2025

இந்திய பேட்மிட்டன் வீராங்கனையின் திருமணத்தில் அஜித் குடும்பம்! வைரல் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகராக காணப்படும் அஜித்குமார் நடிகராக மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், நண்பர்களுடன் ட்ரிப் செல்வது என தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

அஜித் குமார் நடிப்பில் தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டை இலக்கு வைத்து வெளியாக உள்ளன.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் போது அஜித்தும் த்ரிஷாவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்திருந்தன.

d_i_a

அஜித் குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிப்பதை முற்றாக தவிர்த்து தனது குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தி வருகின்றார். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதுவரையில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத நடிகராகவும் அஜித் உள்ளார்.


இந்த நிலையில், அஜித்குமார் நேற்றைய தினம் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதன்போது மணமக்களை வாழ்த்திய அஜித்குமார் அதன் பின்பு அங்கிருந்து புறப்பட போது தனது மகள் அனோஷ்காவுக்கும் மனைவி ஷாலினிக்கும் கார் கதவுகளைத் திறந்து விட்டார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தை கவர்ந்து உள்ளன.

Advertisement

Advertisement