• Jan 19 2025

கல்கியை ஹிட்டாக்கலைன்னா, ‘இந்தியன் 2’ படத்தை ஹிட்டாக்க மாட்டோம்.. புதுவித பயமுறுத்தல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பிரபாஸ் ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் தமிழக ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கமல்ஹாசன் காட்சிகள் மட்டும் நன்றாக இருக்கிறது என்றும் மற்றபடி படம் வேஸ்ட் என்றும் நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மொத்தத்தில் இது ஒரு திரைப்படம், திரைப்படத்தை பார்த்து விமர்சனம் என்ற நிலையை தாண்டி தெலுங்கு நடிகர் படத்தை நெகட்டிவ் ஆக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக ரசிகர்கள் விமர்சனம் செய்வதாக தெலுங்கு ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால் தமிழக ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்த போது ’எந்த மொழி படமாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் நல்ல விமர்சனம் செய்வோம், நன்றாக இல்லை என்றால் நெகட்டிவ் விமர்சனம் தான் செய்வோம், அது தமிழ் படமாக இருந்தாலும் சரி, தெலுங்கு படமாக இருந்தாலும் சரி’’என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘கல்கி 2898 ஏடி’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்து அந்த படத்தை தமிழகத்தில் ஹிட்டாக்காவிட்டால் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் ’இந்தியன் 2’ படத்திற்கு நாங்கள் நெகட்டிவ் விமர்சனம் கொடுப்போம் என்று தெலுங்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சனையில் எங்களை ஏன் இழுக்கிறீர்கள் என்று கமல் ரசிகர்கள் உள்ளே நுழைந்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மொத்தத்தில் இன்று அதிகாலை முதல் சமூக வலைதளங்களில் இந்த பதிவுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement