• Jan 19 2025

விஐபி திருமணங்களில் பங்கேற்க காசு வாங்கும் சினிமா பிரபலங்கள்! சூப்பர் ஸ்டார் உடைத்த உண்மை

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

உலக பணக்காரர்கள் மற்றும் விஐபி திருமணங்களில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட விஷயம் மக்கள் மத்தியில் படு வைரலாக பேசப்படுகின்றது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் நாகர்ஜுனா கூறிய விடயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது திருமணங்களில் கலந்து கொள்வதற்காக சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குகின்றார்கள் என அவர் கூறியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. அந்த திருமணத்திற்காக 5000 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களும் பரிசாக வழங்கப்பட்டது.


மேலும் இந்த திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் காசு வாங்கிகொண்டு தான் வந்தார்கள் என ஒரு பக்கம் பேசப்பட்டது. ஆனாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இவ்வாறான சூழலில் நாகர்ஜுனா பேசிய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை, நாகர்ஜுனா பழைய பேட்டி ஒன்றில் கூறிய விடயம் தான் தற்போது மீண்டும் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement